கவியரசு வைரமுத்துவின் கவிவரிகளை காதலிக்கும் ரசிகனின் நானும் ஒருவன். நட்பினை நேசித்து, நண்பர்களை சிநேகிக்க என்னும் என் உள்ளத்தை இந்த வரிகள் வழிமொழிகிறது.
அந்த கவிஞரின் வரிகள் இதோ,
நட்பு!
நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்
நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும் ஓயாமல்
அலைந்து வரும்
நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்
நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஒரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தங்கிக் கொள்ளும்
நட்பு என்பது
காற்றை போல்
எல்லா இடத்தில்
நிறைந்து இருக்கும்
-வைரமுத்து-
